இந்திய ரிசர்வ் வங்கியானது ஒருங்கிணைந்த கடன் வழங்கீட்டு இடைமுகத்தினை (ULI) தொடங்குவதில் பணியாற்றி வருகிறது.
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) போன்றே, இந்த ULI ஆனது கடன் வழங்கீட்டு கட்டமைப்பில் ஒரு புரட்சியினை ஏற்படுத்தும்.
இந்த ULI இயங்குதளமானது பல்தரவு சேவை வழங்குநர்கள் முதல் கடன் வழங்கும் நிறுவனங்கள் வரை பல்வேறு மாநிலங்களின் நிலப் பதிவுகள் உள்ளிட்ட எண்ணிமத் தகவல்களின் தடையற்ற மற்றும் ஒப்புதல் அடிப்படையிலான வழங்கீட்டினை எளிது ஆக்கும்.
இது குறிப்பாக மிகவும் சிறிய மற்றும் கிராமப்புற கடன் வாங்குபவர்களுக்கான கடன் மதிப்பீட்டு ஒப்புதலுக்கான நேரத்தைக் குறைக்கும்.