TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த சுகாதார தகவல் அமைப்பு

April 11 , 2021 1326 days 637 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் அமைப்பினை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
  • இது ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP - Integrated Disease Surveillance Programme) மேம்பட்ட பதிப்பு ஆகும்.
  • இத்துடன் மேம்பட்ட டிஜிட்டல் ரீதியிலான நோய் கண்காணிப்பு அமைப்பினை மேற்கொண்டுள்ள உலகின் முதல் நாடாக இந்தியா உருவெருத்துள்ளது.
  • மேலும் (புவிசார் பரவல், கணக்கில் சேர்க்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கை மற்றும் உருவாக்கப்பட்ட தரவுகளின் அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில்) இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் நோய் கண்காணிப்பு தளமாகும்.
  • தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இத்தளத்தை உருவாக்குவதில் இணைந்துள்ளன.
  • இத்தளம் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்துடன் ஒத்திசைந்துஆத்ம நிர்பர் சுவதேஷ் பாரத்எனும் இலக்கை அடைய உதவும்
  • இத்தளம் 33 நோய்களைக் கண்காணித்து டிஜிட்டல் முறையில் நிகழ்நேர தரவுகளை வழங்கும் திறனுடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்