மார்ச் 06 அன்று தமிழ்நாடு அரசு தனது ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை அறிவித்துள்ளது.
இது தென் மாவட்டங்களில் ஜவுளித் தொழிற்சாலையின் நீடித்த வளர்ச்சி, தொழில்நுட்ப ஜவுளியை ஊக்குவித்தல் மற்றும் ஜவுளித் தொழிற்சாலையை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருக்கும்.
இதற்கு முன் ஜவுளித் துறைக்கான மாநிலக் கொள்கையானது 1998 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
புதிய கொள்கையின்படி,
மாநில அரசு தொழில்நுட்ப ஜவுளித் திட்டங்களுக்கான முத்திரைத் தாள் கட்டணத்திற்கு 100 சதவிகிதம் விலக்கு அளிக்கும்.
மத்திய அரசிலிருந்து பெறப்படும் ஊக்கத் தொகைகளுடன் தொழில்நுட்ப ஜவுளித் திட்டங்களுக்கான 6 சதவிகித வட்டி மானியத்தை மாநில அரசு அளிக்கும்.
ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காங்களுக்கான திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்காக திட்ட மதிப்பில் 9 சதவிகித நிதியை மாநில அரசு அளிக்கும்.
கைத்தறித் துறைக்கான, முதன்மை கைத்தறித் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் வட்டி மானியம் தற்பொழுது 4 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.