தமிழ்நாடு அரசானது வரும் நவம்பர் 1 முதல் தனது கருவூல நடவடிக்கைகளை முற்றிலும் ஆன்லைனில் கையாள முடிவு செய்துள்ளது.
காகிதமற்ற பரிவர்த்தனைக்குள்ளாக மாறுவதற்கென மாநிலமானது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை (IFHRMS - Integrated Financial and Human Resource Management System) அமைப்பை செயல்படுத்தவுள்ளது.
IFHRMS ஆனது
விப்ரோவை (Wipro) அமைப்பு ஒருங்கிணைப்பாளராகவும்
அசஞ்சர் சர்வீஸஸ்-ஐ (Accenture Services) திட்ட ஆலோசனை நிறுவனமாகவும்
பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்-ஐ (PriceWaterhouse Coopers) மூன்றாம் தரப்பு தணிக்கை நிறுவனமாகவும் இணைத்து செயல்படுத்தப்படவுள்ளது.