TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த நிலப் பதிவேடு

August 17 , 2022 834 days 687 0
  • தமிழக அரசானது, ஒருங்கிணைந்த நிலப் பதிவேட்டினை வெளியிட உள்ளது.
  • இது “சிட்டா”, நில அளவீட்டுப் புத்தகம் மற்றும் “அடங்கல்” நிலத்தொகுதிகள் ஆகியவற்றின்  விவரங்களைக் கொண்ட ஓர் ஆவணமாகும்.
  • தற்போதைய நிலவரப்படி, சிட்டா படிவத்திலுள்ள எழுத்து சார்ந்தத் தரவுகள் மற்றும் அடங்கல் படிவத்திலுள்ள இடம் சார்ந்த தரவுகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
  • சமீபத்தியத் தரவுகளை உள்ளடக்கும் வகையில் இணையவழி அடங்கல் படிவங்கள் திருத்தி அமைக்கப் படுகின்றன.
  • இணையவழி அடங்கல் படிவங்கள் 2.0 என்பது தொடங்கப்பட்ட பின்னர், மற்ற இரண்டு ஆவணங்களுடன் அது நிரப்பப்பட்டவுடன், ஒருங்கிணைந்த நிலப் பதிவேடானது தானாக நில உரிமையாளர்களுக்குக் கிடைக்கப் பெறும்.
  • “சிட்டா” படிவமானது, நில உரிமையாளர் அல்லது உரிமையாளர்களின் பெயர்கள், அதன் கணக்கீட்டு எண் மற்றும் அந்த நிலம் அமைந்துள்ள வருவாய் மாவட்டத்தின் உட்பிரிவுகள், நில அளவு ஆகிய விவரங்களைக் கொண்டு உள்ளது.
  • நில அளவீட்டுப் புத்தகமானது நில அளவைப் படத்தினையும், அடங்கல் படிவம் அந்த நிலத்தில் வளரும் பயிர்களின் தகவல்களையும் உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்