தமிழக அரசானது, ஒருங்கிணைந்த நிலப் பதிவேட்டினை வெளியிட உள்ளது.
இது “சிட்டா”, நில அளவீட்டுப் புத்தகம் மற்றும்“அடங்கல்” நிலத்தொகுதிகள் ஆகியவற்றின் விவரங்களைக் கொண்ட ஓர் ஆவணமாகும்.
தற்போதைய நிலவரப்படி, சிட்டா படிவத்திலுள்ள எழுத்து சார்ந்தத் தரவுகள் மற்றும் அடங்கல் படிவத்திலுள்ள இடம் சார்ந்த தரவுகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
சமீபத்தியத் தரவுகளை உள்ளடக்கும் வகையில் இணையவழி அடங்கல் படிவங்கள் திருத்தி அமைக்கப் படுகின்றன.
இணையவழி அடங்கல் படிவங்கள் 2.0 என்பது தொடங்கப்பட்ட பின்னர், மற்ற இரண்டு ஆவணங்களுடன் அது நிரப்பப்பட்டவுடன், ஒருங்கிணைந்த நிலப் பதிவேடானது தானாக நில உரிமையாளர்களுக்குக் கிடைக்கப் பெறும்.
“சிட்டா” படிவமானது, நில உரிமையாளர் அல்லது உரிமையாளர்களின் பெயர்கள், அதன் கணக்கீட்டு எண் மற்றும் அந்த நிலம் அமைந்துள்ள வருவாய் மாவட்டத்தின் உட்பிரிவுகள், நில அளவு ஆகிய விவரங்களைக் கொண்டு உள்ளது.
நில அளவீட்டுப் புத்தகமானது நில அளவைப் படத்தினையும், அடங்கல் படிவம் அந்த நிலத்தில் வளரும் பயிர்களின் தகவல்களையும் உள்ளடக்கியது.