7 மாநிலங்களின் பொது சுகாதார மேற்பார்வையை கண்காணிப்பதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது புதிய தகவல் தளத்தை புதுடெல்லியில் தொடங்கியுள்ளது.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP - Integrated Disease Surveillance Programme) என அழைக்கப்படும் இந்த திட்டமானது ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தின் (IHIP - Integrated Health Information Platform) ஒரு பிரிவாகும்.
பொது சுகாதார மேற்பார்வை கண்காணிப்புக்கென மத்திய அரசால் தொடங்கப்பட்ட முதல் முயற்சி இதுவேயாகும்.
இது நிகழ் நேரத்தில் புவியியல் தகவல் முறைமை (GIS – Geographical Information System) குறியிடலுடன் கிராம வாரியாக நோய் சார்ந்த மின்னணு சுகாதார தகவல்களை வழங்கும் அமைப்பாகும். இது உடனடி நோய்த் தடுப்பு முறைகளை வழங்குவதற்கும் தொற்றுத் தன்மையுடைய நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.
இது திடீர் நோய்ப் பெருக்கத்தை கண்டறியவும் நோயுற்ற பாதிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் இறப்பைத் தடுக்கவும் மக்களிடத்தில் நோய் பாதிப்பு மற்றும் அதன் சுமைகளை குறைக்கவும் குறித்து கொள்கை வகுப்பாளர்களுக்கு அண்மை நிகழ்நேர தரவுகளை அளிக்கும்.