TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு - RCEP

November 7 , 2019 1752 days 623 0
  • இந்தியப் பிரதமர் பாங்காக்கில் நடந்த ஒருங்கிணைந்த பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு (Regional Comprehensive Economic Partnership-RCEP) அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • இந்தியாவிற்குள் அதிக அளவில் சீனப் பொருட்களின் இறக்குமதி ஏற்படக் கூடும் என்ற அச்சத்தின் பேரில், இந்தக் கூட்டமைப்புடன் இணைய வேண்டாம் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • RCEP இன் கீழ், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்து 74% பொருட்கள் மற்றும் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆசியான் ஆகிய நாடுகளில் இருந்து 90% பொருட்கள் ஆகியவற்றுக்கான வரிகளை நீக்க இந்தியா நிர்பந்திக்கப்படும்.
  • இந்தியா ஏற்கனவே சீனாவுடன் 57 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறையை கொண்டுள்ளது. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது.

RCEP

  • RCEP என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் உள்ள (ஆசியான்) 10 உறுப்பு நாடுகள் மற்றும் ஆசியான் குழுவில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) கொண்ட ஆறு நாடுகள் என்று மொத்தம் 16 நாடுகளிடையேயான ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும்.
  • இதில் ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் அடங்கும்.
  • இது உலகின் ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்