TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த பெருங்கடல் ஆற்றல் குறித்த தகவல் தொகுப்பு வரைபடம்

September 29 , 2024 15 hrs 0 min 30 0
  • ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசியப் பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் (INCOIS) ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்தப் பெருங்கடல் ஆற்றல் குறித்த தகவல் தொகுப்பு வரைபடத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • ஓத அலைகள் மற்றும் நீரோட்டங்கள் போன்ற கடல் சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து ஆற்றலை உருவாக்கச் செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் கடற்கரையோரத் தளங்களை இது வரைபடமாக்குகிறது.
  • இது கடற்கரையோரத்தில் உள்ள சாத்தியமான ஆற்றல் மூல தளங்களில் தனிப்பட்ட அல்லது ஒருங்கிணைந்த கடல் சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உருவாக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மதிப்பிடப்பட்ட பல்வேறு மதிப்புகளை வழங்குகிறது.
  • இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (EEZ) ஆனது பல கடல் சார் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து சுமார் 9.2 லட்சம் டெராவாட் மணி நேர (TWh) ஆற்றலை உருவாக்கும் வகையிலான திறனைக் கொண்டுள்ளது.
  • இந்தியா சுமார் 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள பரந்தக் கடற்கரையைக் கொண்டுள்ளது என்பதால் இது ஆற்றல் உற்பத்திக்குப் போதுமான வாய்ப்பை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்