TNPSC Thervupettagam

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்குத் தடை

June 30 , 2022 752 days 364 0
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டைத் தடை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழித் தடையை மீறுபவர்கள் 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
  • இதில் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளை அறிவித்தது.
  • இந்த விதிகளானது, 2022 ஆம் ஆண்டிற்குள் "அதிக குப்பைகளாக குவியும் வாய்ப்புள்ள மற்றும் குறைந்த பயன்பாடு கொண்ட"  குறிப்பிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களைத் தடை செய்வதற்காக அறிவிக்கப்பட்டது.
  • இந்த விதிகளின்படி, குறிப்பிட்ட  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் தடை செய்யப்படும்.
  • இதில் பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் ஆகியவை அடங்கும்.
  • மக்கும் நெகிழியினால் செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நெகிழிப் பைகளின் அனுமதிக்கப் பட்ட தடிமன் அளவு 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாகவும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் 120 மைக்ரானாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலாவைச் சேமித்து வைப்பதற்கும், பொதிகள் செய்வதற்கும் அல்லது விற்பனை செய்வதற்கும் கூட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு முழுமையான தடை உள்ளது.
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவை இதற்கானக் கண்காணிப்பு ஆணையமாகும்.
  • இவை தடையைக் கண்காணித்து, விதிமீறல்களைக் கண்டறிந்து, 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அபராதங்களை விதிக்கும்.
  • இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 9.46 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் உற்பத்திகின்றன.
  • அதில் 43% ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்கள் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலகளவில் உற்பத்தி செய்யப் படும் நெகிழிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களாக உள்ளது.
  • அதில் 98% நெகிழிப் பொருட்கள் புதைபடிவ எரிபொருட்களிலிருந்துத் தயாரிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்