சட்ட ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வெள்ளை அறிக்கையானது மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் 2019 ஆம் ஆண்டில், ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்திட பரிந்துரை செய்துள்ளது.
இந்த நோக்கம் நிறைவேறிட அரசியலமைப்பை திருத்திடவும் இது பரிந்துரை செய்கின்றது.
இந்த ஆணையம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி S. சௌஹான் தலைமையில் அமைந்திருக்கின்றது.
முக்கியப் பரிந்துரைகள்:
ஒரே சமயத்திலான தேர்தல்கள், சுதந்திரத்திற்கு பிறகிலிருந்து 1967 வரையிலான முதல் இருபது ஆண்டுகளில் நடத்தப்பட்டன என ஆணையம் கூறுகின்றது.
வெள்ளை அறிக்கையானது, அரசியலமைப்பு, 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் மக்களவை, மாநில சட்டமன்றங்கள் ஆகியவற்றின் நடைமுறை விதிகள் ஆகியவற்றை திருத்துவதன் மூலம் ஒரே சமயத்திலான தேர்தல்களை நடத்த முடியும் என பரிந்துரை செய்கின்றது.
இந்தக் குழுவானது, இடைக்கால தேர்தல்கள் நடத்தப்படுமேயானால் புதிய மக்களவை அல்லது சட்டப் பேரவைகள் ஏற்கனவே உள்ள மக்களவை அல்லது சட்டப் பேரவைகளின் எஞ்சியுள்ள காலத்திற்கு மட்டும் ஏற்படுத்தப்படுமென்றும், புதிய ஐந்து வருடங்களுக்கு ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறுகின்றது.
மேலும் இவ்வறிக்கை பிரதமர் அல்லது முதல்வர், சபாநாயகர் போன்று சபையின் முழுக் காலத்திற்கும் தலைமை வகிக்கும் முறையில் ஒட்டு மொத்த அவையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும் கூறுகின்றது.