ஒரே சுகாதார முன்னுரிமை ஆராய்ச்சிக்கான செயல்பாட்டு நிரல்
July 22 , 2023 493 days 240 0
உணவு மற்றும் வேளாண் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, உலக சுகாதார அமைப்பு மற்றும் விலங்கின ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு (WOAH) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நாற்கர அமைப்பானது நுண்ணுயிர் எதிர்ப்பு பற்றிய ஒரே சுகாதார முன்னுரிமை ஆராய்ச்சிக்கானச் செயல்பாட்டு நிரலை வெளியிட்டுள்ளது.
இந்தக் கருத்தானது மனிதர்கள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள், தாவரங்களின் ஆரோக்கியம் மற்றும் சூழலமைப்புகள் உள்ளிட்ட பெரிய சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றுக்கொன்றுப் பிரிக்க முடியாத வகையில் நன்கு பிணைக்கப் பட்டவை மற்றும் ஒன்றுக்கொன்றுச் சார்ந்துள்ளவை என்பதை அங்கீகரித்துள்ளது.
இந்த ஒரு சுகாதார இடைமுகத்தில் பல உலகளாவியச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான பல்துறை சார்ந்த மற்றும் பல்பிரிவு சார்ந்த நடவடிக்கை தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது.
இந்தச் செயல்பாட்டு நிரலின் ஐந்து முக்கியப் பிரிவுகள் பரிமாற்றம், ஒருங்கிணைந்தக் கண்காணிப்பு, நடவடிக்கைகள், நடைமுறை சார்ந்தத் தகவல் மற்றும் மாற்றம், பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆகியனவாகும்.
ஒரே சுகாதார நுண்ணுயிர் எதிர்ப்பு ஆராய்ச்சியை ஆதரிப்பதற்கு நாடுகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நிதி வழங்கீட்டு அமைப்புகளுக்கு இது முக்கிய வழிகாட்டியாக இருக்கும்.
கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்துறை அறிவியல் சமூகத்தினர் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பினை மேற்கொள்ள இது வழிவகுக்கும்.