TNPSC Thervupettagam

ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை

October 27 , 2023 268 days 276 0
  • மத்தியக் கல்வி அமைச்சகமானது, இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை’ என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தும் பணியினைத் தொடங்கியுள்ளது.
  • இது மாணவர்களின் வாழ்நாள் முழுவதுமான முக்கியச் சாதனைகள் மற்றும் கல்விப் பயணங்களைப் பதிவு செய்யும் ஒரு வாழ்நாள் அடையாள அட்டையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • இந்தப் புதிய முன்னெடுப்பிற்குத் தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவு (APAAR) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது கல்வி சார் சூழலமைவுப் பதிவேடு அல்லது 'EduLocker' என்றும் அறியப்படுகிறது.
  • APAAR என்பது வாழ்நாள் முழுவதும் பயன்படும் அடையாள எண்ணாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் கல்விப் பயணங்கள் மற்றும் சாதனைகளைக் கண்காணிப்பதை எளிதாக்கும் வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • மாணவர்கள் அவர்களுடைய தேர்வு முடிவுகள், கற்றல் முடிவுகள் மற்றும் ஒலிம்பியாட்களில் பங்கெடுத்ததற்கான தரவரிசை அல்லது சிறப்புத் திறன்களைப் பெறுதல் போன்ற இணைப் பாடத்திட்டச் சாதனைகளை எண்ணிம முறையில் பதிவு செய்து சேமிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்