TNPSC Thervupettagam

ஒரே நேரத்தில் வேளாண்மை மற்றும் சூரிய சக்தி உற்பத்தி

November 12 , 2024 16 days 140 0
  • இந்தியாவானது சர்வதேச சூரிய சக்தி கூட்டணி சபையில் சூரிய ஆற்றல் உற்பத்தியை வேளாண்மையுடன் இணைப்பதில் தனது யோசனைகளை எடுத்துரைத்தது.
  • அக்ரிவோல்டாயிக் என்ற ஒரு வேளாண்மை முறையானது முதன்மையாக நிலத்தை  வேளாண்மை மற்றும் சூரிய சக்தி உற்பத்தி ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த முறையில், சூரியசக்தி உற்பத்தி தகடுகள் ஆனது பயிர்களுக்கு மேலே நிறுவப் பட்டு, வேளாண்மை மற்றும் ஆற்றல் உற்பத்தி ஆகிய இரண்டிற்கும் நிலத்தைப் பயன்படுத்த வழிவகை செய்யபடுகிறது.
  • இது நில உற்பத்தியை அதிகப்படுத்தவும், சில பயிர்களுக்கு நிழல் தரவும் மற்றும் மண்ணின் ஈரப்பத இழப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
  • இந்த முறையானது வேளாண்மையின் நெகிழ் திறன் மற்றும் உற்பத்தித் திறனை -குறிப்பாக குறைந்த விளை நிலங்கள் உள்ள சில பகுதிகளில் - மேம்படுத்தும் அதே வேளையில் நிலையான ஆற்றல் மாற்றத்தை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்