TNPSC Thervupettagam

ஒரே மாதிரியான சாலை வரி அமைப்பு

April 22 , 2018 2412 days 751 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட அமைச்சர்களின் குழு வணிகரீதியிலான வாகனங்களின் நாடு முழுவதுமான எளிதான இயக்கத்திற்காக ஒரு தேசம் ஒரு வரி என்ற கொள்கையை முன்மொழிந்துள்ளது.
  • இரண்டு நாள் நடைபெற்ற இந்த அமைச்சர்கள் குழுவின் மாநாடு ராஜஸ்தான் போக்குவரத்து அமைச்சர் யூனுஸ்கான் அவர்களின் தலைமையில் அஸ்ஸாமின் கவுகாத்தியில் நடைபெற்றது.
  • இந்த முன்மொழிவு
    • ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சாலை வரிவிதிப்பு ஏதுமின்றி வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதிக்கிறது.
    • குறைந்த வரியுடைய மாநிலங்களில் வாகனங்களைப் பதிவு செய்து மற்ற மாநிலங்களில் தங்களது வாகனங்களை இயக்கும் மக்களை கண்காணிக்கின்றது.
  • மோட்டார் வாகனங்களில், வரியை விதிப்பதற்கான கொள்கைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. விலைப்பட்டியலிலுள்ள வாகன விலையின் மூன்று அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும்.
  • 10 லட்சத்திற்கும் கீழான விலையுடைய வாகனங்களின் மீதான வரி 8%, 10-20 லட்சம் மதிப்புடைய வாகனங்களின் மீதான வரி 10%, 20 லட்சத்திற்கும் மேலான மதிப்புடைய வாகனங்களின் மீதான வரி 12% ஆகும்.
  • மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு வரியில் 2% தள்ளுபடியும், டீசல் வாகனங்களுக்கு 2% கூடுதல் வரியும் விதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்