இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR - Indian Council of Medical Research) ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறை கொண்ட கோவிட் – 19 சோதனையைத் தொடங்க உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதன்மூலம் ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறைச் சோதனையைத் தொடங்கும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
சோதனையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மாநிலத்தில் ஒற்றை முறை அதிக அளவு கொண்ட குழு முறையிலான சோதனையானது (Pool testing) நடத்தப் படுகின்றது
ஒற்றை முறை அதிக அளவு குழு கொண்ட முறைச் சோதனையின் கீழ், மாதிரிகள் ஒன்றுடன் ஒன்றாகக் கலக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட இருக்கின்றன.
ஒற்றை முறை அதிக அளவு கொண்ட குழு முறைச் சோதனை வழிமுறையானது பல்வேறு தனிப்பட்ட நோயாளிகளின் ஒரு குறிப்பிட்ட மாதிரியின் கலவையைக் கொண்டு பல்படிம நொதி தொடர் வினைச் சோதனை முறையில் ஈடுபடுகின்றது.
இதில் குழு முறைச் சோதனை நேர்மறையாக இருந்தால் மட்டும் தனிநபர் சோதனை மேற்கொள்ளப் படுகின்றது.
சோதனை எதிர்மறையாக உள்ள அனைத்துத் தனிநபர் மாதிரிகளும் எதிர்மறையாகக் கருதப் படுகின்றன. குழு முறைச் சோதனையானது எதிர்மறையாக இருந்தால் மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் பணமானது சேமிக்கப் படுகின்றது.
ஒற்றை முறை அதிக அளவு குழு முறைச் சோதனைக்கான தேவை
இது நோயாளிகளைச் சோதனையிடுவதற்கான மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மொத்தச் சோதனை உபகரணங்களின் தேவைகளைக் குறைக்கின்றது.
இது மாநிலத்தின் சோதனைத் திறனை அதிகரிக்கின்றது.
இது குறிப்பாக குறைவான வளங்களைக் கொண்ட நாடுகளுக்குச் செலவு குறைந்ததாக உள்ளது.
இது நோயின் சமூகப் பரவலைத் தடுக்கப் பயன்படுத்தப் படுகின்றது.