TNPSC Thervupettagam

ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறை கொண்ட சோதனை

April 18 , 2020 1557 days 571 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR - Indian Council of Medical Research) ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறை கொண்ட கோவிட் – 19 சோதனையைத் தொடங்க உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
  • இதன்மூலம் ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறைச் சோதனையைத் தொடங்கும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
  • சோதனையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மாநிலத்தில் ஒற்றை முறை அதிக அளவு கொண்ட குழு முறையிலான சோதனையானது (Pool testing) நடத்தப் படுகின்றது
  • ஒற்றை முறை அதிக அளவு குழு கொண்ட முறைச் சோதனையின் கீழ், மாதிரிகள் ஒன்றுடன் ஒன்றாகக் கலக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட இருக்கின்றன.
  • ஒற்றை முறை அதிக அளவு கொண்ட குழு முறைச் சோதனை வழிமுறையானது பல்வேறு தனிப்பட்ட நோயாளிகளின் ஒரு குறிப்பிட்ட மாதிரியின் கலவையைக் கொண்டு பல்படிம நொதி தொடர் வினைச் சோதனை முறையில் ஈடுபடுகின்றது. 
  • இதில் குழு முறைச் சோதனை நேர்மறையாக இருந்தால் மட்டும் தனிநபர் சோதனை மேற்கொள்ளப் படுகின்றது. 
  • சோதனை எதிர்மறையாக உள்ள அனைத்துத் தனிநபர் மாதிரிகளும் எதிர்மறையாகக் கருதப் படுகின்றன. குழு முறைச் சோதனையானது எதிர்மறையாக இருந்தால் மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் பணமானது சேமிக்கப் படுகின்றது.

ஒற்றை முறை அதிக அளவு குழு முறைச் சோதனைக்கான தேவை
  • இது நோயாளிகளைச் சோதனையிடுவதற்கான மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மொத்தச் சோதனை உபகரணங்களின் தேவைகளைக் குறைக்கின்றது.
  • இது மாநிலத்தின் சோதனைத் திறனை அதிகரிக்கின்றது.
  • இது குறிப்பாக குறைவான வளங்களைக் கொண்ட நாடுகளுக்குச் செலவு குறைந்ததாக உள்ளது.
  • இது நோயின் சமூகப் பரவலைத் தடுக்கப் பயன்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்