நியூசிலாந்து ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழி வணிகப் பைகளை 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அதிகாரப் பூர்வமாகத் தடை செய்துள்ளது.
ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிப் பைகள் என்பது 70 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனைக் கொண்டும் கைப் பிடிகளைக் கொண்டும் இருக்கும் நெகிழிப் பைகள் என்று வரையறுக்கப்பட்டு இருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி (UNEP - United Nation Environment Programme), 80ற்கும் மேற்பட்ட நாடுகள் இதுபோன்ற தடைகளை ஏற்கனவே விதித்துள்ளன.