ஜம்முவின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியர், ஒலி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு அற்புதமான ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
ஒலியை அடிப்படையாகக் கொண்டு கண்டறிதல் எனப்படும் இந்த அமைப்பு ஆனது, ஆளில்லா விமானங்கள் வெளியிடும் தனித்துவமான ஒலியைக் கண்டறியும் முதல் வகை தொழில்நுட்பமாகும்.
இந்த அமைப்பானது, இந்த ஒலி சார்ந்தத் தடயங்களை ஒரு தரவுதளத்துடன் ஒப்பிடச் செய்வதன் மூலம், ஆளில்லா விமானங்களை மிகவும் துல்லியமாக அடையாளம் காண முடியும்.
இந்த அமைப்பு ஆனது 300 மீட்டர் எல்லைக்குள் பறக்கும் ஆளில்லா விமானங்கள், விமானங்கள், பன்முக ஆளில்லா விமானங்கள் அல்லது பறவைகளை அவற்றின் ஒலியை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணும் திறன் கொண்டது.