TNPSC Thervupettagam

ஒலிம்பஸ் மோன்ஸில் உறைபனி நிறைந்த மலைச்சிகரங்கள்

June 18 , 2024 159 days 225 0
  • செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிவரும் இரண்டு விண்கலங்கள் செந்நிறக் கோளின் மத்திய ரேகைக்கு அருகில் உள்ள உயரிய எரிமலைகளின் மேல் பகுதியில் உறைபனி இருப்பதைக் கண்டறிந்துள்ளன.
  • சூரியக் குடும்பத்தின் மிக உயரமான எரிமலைகளான தர்சிஸ் எரிமலைகளில் உறை பனி இருப்பதை அவை கண்டறிந்தன.
  • மனித முடி அளவிலான தடிமனேயேக் கொண்டுள்ள (ஒரு மில்லிமீட்டரில் நூற்றில் ஒரு பங்கு தடிமன்)  இந்த உறைபனியானது மிகப்பெரியப் பரப்பளவில் பரவியுள்ளது.
  • இது செவ்வாய்க் கிரகத்தில் குளிர் காலங்களில் சுமார் 150,000 டன் நீர் உறைந்து ஆவியாவதற்குச் சமம் ஆகும்.
  • இது தோராயமாக 60 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்குச் சமம் ஆகும்.
  • செவ்வாய்க் கிரகத்தின் தர்சிஸ் பகுதியில் ஏராளமான எரிமலைகள் அமைந்துள்ளன.
  • இதில் ஒலிம்பஸ் மோன்ஸ் மற்றும் தர்சிஸ் மாண்டஸ், அஸ்க்ரேயஸ், பாவோனிஸ் மற்றும் ஆர்சியா மோன்ஸ் ஆகியவை அடங்கும்.
  • இந்தப் பகுதியில் உள்ள பல எரிமலைகள் பூமியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தைப் போல் பெரியவை அல்லது அதைவிடப் பெரியவையாகும்.
  • ஒலிம்பஸ் மோன்ஸ் எவரெஸ்ட்டைப் போல மூன்று மடங்கு உயரம் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்