கிரீக் நாட்டில் உள்ள பண்டைய ஒலிம்பியாவில் 2020 ஆம் ஆண்டின் டோக்கியோ விளையாட்டுக்கான ஒலிம்பிக் சுடரானது ஏற்றப்பட்டது.
கிரேக்க ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அன்னா கோரகாக்கி என்பவர் ஆரம்பத்தில் இந்தச் சுடரைத் தாங்கிச் சென்றார். ஒரு பெண் இந்தச் சுடரைத் தாங்கிச் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
ஜப்பான், அதிலும் குறிப்பாக டோக்கியோ நகரம் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இரண்டாவது முறையாகும்.
இந்த நாடு (டோக்கியோ) இதற்கு முன்பு முதல்முறையாக 1964 ஆம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது.
கோடைக்கால விளையாட்டுகளை இரண்டு முறை நடத்தும் ஆசியாவின் முதலாவது நகரமாக டோக்கியோ உருவெடுத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இது ஜப்பானில் நடைபெறும் நான்காவது ஒலிம்பிக் போட்டியாகும். இது 1972 (சப்போரோ) மற்றும் 1998 (நாகானோ) ஆகிய ஆண்டுகளில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது.