TNPSC Thervupettagam

ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டம்

July 13 , 2018 2199 days 643 0
  • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் பணிப் பிரிவானது இந்தியாவின் ஒட்டு மொத்த ஆண்களுக்கான ஹாக்கி அணியை ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது (Target Olympic Podium Scheme)
  • ஒட்டு மொத்த அணியும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னர் வெவ்வெறு விளையாட்டுகளிலிருந்து தனித்தனி வீரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்.
  • 18 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 50,000 பெறுவர்.
  • தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிதியின் (National Sports Development fund) வரம்பிற்குட்பட்டு விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஒலிம்பிக் பணிப் பிரிவில் உறுப்பினர்களாக உள்ள இந்தியாவின் விளையாட்டு ஆணையம் மற்றும் கூட்டமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் நிதியை பிரித்து வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கும் குழுக்களாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றை அறிந்து உதவி செய்வதற்காக அபினவ் பிந்த்ரா குழு அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்