ஒலிம்பிக் போட்டிகள் 2024 : பசுமை நடவடிக்கை சார் விளையாட்டுப் போட்டிகள்
August 2 , 2024 112 days 210 0
2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், இதுவரை இல்லாத அளவிற்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது பதிவாகும் கார்பன் உமிழ்வினை சுமார் 50 சதவீதம் குறைக்க உள்ளதாக ஒழுங்கமைப்புக் குழு உறுதியளித்துள்ளது.
இது டோக்கியோ 2020, ரியோ 2016 மற்றும் இலண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பதிவான சுமார் 3.5 மில்லியன் டன்கள் என்ற கார்பன் உமிழ்வினை வரவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் 1.75 மில்லியன் டன்களாக குறைக்க உள்ளது.
இந்த ஆண்டு போட்டிகள் முழுமையாக புவி வெப்ப மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலங்களைச் சார்ந்து நடத்தப்பட உள்ளன.
அனைத்து ஒலிம்பிக் மைதானங்களுக்கும் பொதுப் போக்குவரத்து மூலம் சென்று அடையும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நகரத்தில் 1,000 கி.மீ தொலைவு வரையிலான பிரத்தியேக மிதிவண்டி ஓட்டப் பாதைகளை உருவாக்கியுள்ளதோடு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாட்கள் வரை 3,000 வாடகை மிதிவண்டிகள் வழங்கப் பட உள்ளன.
இது தாவர மூலம் சார்ந்த, உள்நாட்டிலேயே கிடைக்கப் பெறும் மற்றும் நிலையான உணவு விருப்பத் தேர்வுகளை வழங்குகிறது.
பாரீஸ் நடத்தும் 95 சதவீத ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டமைப்புகள் அல்லது தற்காலிக அமைப்புகளையே பயன்படுத்துகிறது.