TNPSC Thervupettagam

ஒலிம்பிக் போட்டிகள் 2024

July 28 , 2024 117 days 534 0
  • 2024 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெறுகின்றன.
  • தற்பொழுது பாரீஸ் நகரில் மூன்றாவது முறையாகவும், கடந்த 1924 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, முதன்முறையாகவும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகிறது.
  • இந்த விளையாட்டுப் போட்டிகளின் போது சுமார் 5804 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
  • மூன்று முறை (1908, 1948 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய மற்றொரு நகரம் இலண்டன் மட்டுமே ஆகும்.
  • இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 32 விளையாட்டுப் பிரிவுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
  • 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 28 "முக்கிய" ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் பாரீஸ் ஏற்பாட்டுக் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய நான்கு விருப்பத் தேர்வு விளையாட்டுகள் இதில் அடங்கும்.
  • இந்த ஆண்டு முதன்முறையாக கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவானது, பாரம்பரிய ஒலிம்பிக் மைதானத்திற்குப் பதிலாக வேறொரு இடத்தில் நடத்தப் பட்டது.
  • ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பதக்கங்கள் ஆனது, ஈபிள் கோபுரத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில புதுப்பிப்பு நடவடிக்கைகளின் போது எடுக்கப் பட்ட ஒரு இரும்புத் துண்டை கொண்டிருக்கும்.
  • நடந்து வரும் உக்ரைன் போரில் பங்கு கொண்டுள்ளதால் 2024 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் ரஷ்யாவிலிருந்து 15 தடகள வீரர்களும் பெலாரஸிலிருந்து 18 வீரர்களும் "தனிப் பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்கள்" அல்லது AINகளாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
  • AIN பிரிவின் கீழ் போட்டியிடும் போது ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டின் கொடிகள், தேசிய கீதங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவை பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் அனுமதிக்கப் படாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்