ஒளி ஊடுருவும் தன்மையுடைய மீத்திறன் - காப்பு கூழ்மம் உருவாக்கம்
August 16 , 2018 2292 days 776 0
அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஏரோஜெல் (Aerogel) ஆனது பீர் தயாரிப்பின்போது வரும் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட வெப்ப எதிர்ப்பு திறனுடைய மீத்திறன் காப்புக் கூழ்மம் ஆகும். இது சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற புவிக்கு அப்பாலான வாழ்விடங்களில் பசுமை வீடு போன்ற வாழ்விடங்களை உருவாக்க உதவும்.
மேலும் பூமியில் உள்ள கட்டிடங்களில் மிகப்பெரிய அளவில் ஆற்றல் செலவுகளைக் குறைக்கவும் இது உதவும். மேலும் சாளரங்கள், புவிக்கு அப்பாலான வாழ்விடங்களை உருவாக்கவும் இது உதவும்.
இது வெப்ப காப்பு பொருள் மற்றும் உள் சக்தி சேமிப்பு மூலம் சூரிய ஒளி ஆற்றலை அறுவடை செய்ய உதவுகிறது. இதனால் குறிப்பாக செவ்வாய் அல்லது சந்திரனில் வெப்ப நிலையின் மிகப்பெரிய அலைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.