மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தின் (JNCASR - Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) விஞ்ஞானிகள், பொருளாதார மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மெல்லிய அளவிலான ஒரு ஒளிக் கண்டுபிடிப்பானை உருவாக்கியுள்ளனர்.
இந்த மெல்லிய ஒளிக் கண்டுபிடிப்பானது பாதுகாப்புப் பயன்பாடுகளுக்காக தங்கம் - சிலிக்கான் இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது.
பலவீனமான மற்றும் சிதறிய ஒளியைக் கண்டறிய இந்தத் தொழில்நுட்பம் உதவக் கூடும்.
எந்தவொரு ஒளி மின்னணுவியல் சுற்றுப் பாதையிலும் ஒளிக் கண்டுபிடிப்பான்கள் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன.