30 ஆண்டுகள் பழமையான 1995 ஆம் ஆண்டு கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலையமைப்புகள் சட்டத்தினை 2024 ஆம் ஆண்டு ஒளிபரப்புச் சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா கொண்டு மாற்றியமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சட்டமானது யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் X போன்ற தளங்களில் செய்தி நிகழ்வுகளை சுயமாக உருவாக்கி வெளியீடுபவர்கள் மீது பல்வேறு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது.
இந்தப் புதிய சட்டமானது, "எண்ணிம வழியிலான செய்தி ஒளிபரப்பாளர்" என்பதனை சிறந்த முறையில் வரையறுக்கிறது என்பதோடு மேலும் நிகழ்ச்சி மதிப்பீட்டிற்கான தரநிலைகளைப் பரிந்துரைப்பதற்காக அரசாங்கத்திடம் முன் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையினை முன்மொழிந்துள்ளது.