TNPSC Thervupettagam

ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா, 2023

July 30 , 2023 358 days 249 0
  • மாநிலங்களவையானது, 2023 ஆம் ஆண்டு ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இது கடுமையான திரைப்படக் களவு எதிர்ப்பு விதிகளை அறிமுகப்படுத்தி திரைப்பட தணிக்கை முதல் பதிப்புரிமை வரையிலான பல செயல்முறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டத்தின் வரம்பினை விரிவுபடுத்துகிறது.
  • ஒரு திரைப்படத்தினை அனுமதியின்றித் திருடுவதற்கு எந்தவொரு ஒலி-ஒளிப்பதிவு சாதனத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் மூன்று ஆண்டுகள் காலம் என்ற வரையில் சிறைத் தண்டனையும், படத்தின் தயாரிப்புச் செலவில் 5% வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.
  • இந்த மசோதாவானது, 1952 ஆம் ஆண்டு ஒளிப்பதிவுச் சட்டத்தைத் திருத்தியமைக்க முயல்கிறது.
  • இளம் பருவத்தினருக்கு மேற்பார்வை தேவைப்படும் படங்களுக்கு மூன்று வயதுசார் மதிப்பீடுகளையும் வழங்கும் முறையை இந்த மசோதா அறிமுகப் படுத்துகிறது.
  • திரைப்படங்கள் தற்போது U/A மதிப்பீட்டைப் பெறுகின்றன.
  • இது தற்போது U/A 7+, U/A 13+ மற்றும் U/A 16+ எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்