ஒளியைப் பயன்படுத்தி மின்னேற்றம் செய்யக்கூடிய வகையிலான எளிதில் சுமந்து செல்லக் கூடிய மீ மின்கடத்திகளை இந்திய மற்றும் கொரிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இது திறன் பேசிகள் மற்றும் வரைபட்டிகை போன்ற சிறிய மற்றும் உடலில் அணியக் கூடிய சாதனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழக்கமான லித்தியம்-அயனி மின்கலங்களுக்கு மாற்றாக அமையும்.
இருப்பினும், இந்த வகை மீ மின்தேக்கிகளானது விரைவாக மின்னேற்றமடையும் திறன் மற்றும் மின்னிறக்கமடையும் திறன் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
வழக்கமான மின்கலங்களைப் போல இவை வேதிச் சிதைவுக்கு உட்படாததால் அவை நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கின்றன.
ஒரு மீ மின்கடத்திச் சாதனமானது மின்முனை, மின்பகுளி மற்றும் மின்னேற்றச் சேமிப்பான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.