ஒளியிழை கம்பிவட இறக்குமதிகள் மீதான இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி
August 10 , 2023 472 days 291 0
நிதி அமைச்சகமானது சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட ஒளியிழைக் கம்பிவடங்கள் மீது இறக்குமதி குவிப்பு தடுப்பு வரிகளை விதித்துள்ளது.
இது இவற்றின் இறக்குமதிகளால் உள்நாட்டுத் தொழில்துறையில் ஏற்படும் பல்வேறு பாதகமிக்க விளைவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வர்த்தகத் தீர்வுகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (DGTR) பரிந்துரைகளின் அடிப்படையில் விதிக்கப் பட்டுள்ளது.
சமச்சீரான வர்த்தக நடைமுறைகளைச் செயலாக்குவதற்காக இறக்குமதி குவிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன.
மேலும் இது உள்நாட்டுத் தொழில்துறைகளுக்கான ஒரு சமநிலையானப் போட்டிச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வரிகள் விதிக்கப்படுவதன் நோக்கம் இறக்குமதியைத் தடுப்பதோ அல்லது நியாயமற்ற முறையில் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்துவதோ அல்ல.
உலக வர்த்தக அமைப்பு (WTO) அமைத்த உலகளாவியக் கட்டமைப்பின்படி அரசுகள் வரிகளை விதிக்கின்றன.