ஒளியிழை நுண் அளவியல் வடிவங்களைக் கட்டுருவாக்கல் செயல்முறை
May 31 , 2024 177 days 145 0
கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிவியலாளர்கள் குழு ஒரு எளிய மேற்பரப்பு அகச்சிவப்பு ஒளிக்கற்றையினைப் பெருமளவில் பயன்படுத்தி நுண் அளவியல் வடிவங்களைக் கட்டுருவாக்கல் செயல்முறையை உருவாக்கியுள்ளனர்.
மேசயின் மேலுள்ள ஓர் எளிய அகச்சிவப்பு ஒளிக்கற்றை, பொருட்களை அவற்றின் ஒத்ததிர்வு அதிர்வெண்ணில் அவற்றை நேரடியாகத் தொடாமல் அவற்றின் பல்வேறு பண்புகளை மாற்றப் பயன்படுகிறது.
நுண் அளவியல் வடிவங்களைக் கட்டுருவாக்கல் செயல்முறை என்பது நுண் அளவில் உள்ள பொருட்களின் மீது வடிவங்களை உருவாக்கும் செயல்முறையை வெகுவாக உள்ளடக்கியதாகும்.
இது ஒரு மனித முடியின் அகலத்தை விட நூறு ஆயிரம் மடங்கு சிறியதாகும்.