நுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (INST) ஆனது, ஒளிரும் நுண் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு புதியப் பாதுகாப்பு மையை உருவாக்கியுள்ளது.
இது நாணயம், சான்றிதழ்கள், உயர்தர தயாரிப்புப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் போலிகளை தடுப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மை என்பது பல்வேறு ஒளி அலைநீளங்களின் கீழ் வெவ்வேறு வண்ணங்களை வெளிப்படுத்துவதால், அது மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதன் உருவாக்கச் செயல்முறையானது சில அருமண் தனிமங்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி வார்ப்பு மற்றும் ஒரு இணைக் கலப்பு முறையை உள்ளடக்கியதோடு இது பல்வேறு சூழல்களில் இந்த மை பயன் மிக்கதாக இருக்க வழி வகுக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பானது, அதன் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்கும் சில போலி தயாரிப்புகளைத் தடுப்பதற்குமான நம்பகமான தீர்வை வழங்குகிறது.