TNPSC Thervupettagam

ஒழுங்கற்றப் பருவநிலை அறிக்கை 2024

October 25 , 2024 28 days 119 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) பொருளாதார நிபுணர், “ஒழுங்கற்றப் பருவ நிலை. கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், பெண்கள் மற்றும் இளையோர்கள் மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை அளவிடுதல்” எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
  • இந்தியாவில் உள்ள கிராமப்புற ஏழைகளின் வேளாண் வருமான மூலங்கள் ஆனது பருவநிலை நெருக்கடியின் வகையைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் பாதிக்கப் பட்டுள்ளன.
  • ஒரு சராசரி ஆண்டில் உலகளவில் ஏழைக் குடும்பங்கள் ஆனது ஒப்பீட்டளவில் மிக மேம்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுடன் ஒப்பிடுகையில், அவர்களின் மொத்த வருமானத்தில் சுமார் 5 சதவீதத்தினை வெப்பத் தாக்கத்தின் காரணமாகவும், 4.4 சதவீதத்தினை வெள்ளம் காரணமாகவும் இழக்கின்றன.
  • வெள்ளம் ஆனது, உலகளவில், கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் ஏழ்மை நிலையில் அல்லாத குடும்பங்களுக்கு இடையேயான வருமான இடை வெளியை ஆண்டிற்கு சுமார் 21 பில்லியன் டாலர் அளவுக்கு விரிவுபடுத்துகிறது.
  • வெப்பத் தாக்கம் ஆனது ஆண்டிற்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவிற்கு இந்த இடைவெளிகளை விரிவுபடுத்துகிறது.
  • சராசரி நீண்ட கால வெப்பநிலையில் ஏற்படும் சுமார் 1° C அதிகரிப்பு ஆனது ஏழைக் குடும்பங்களின் வேளாண் வருமானம் 53% அளவு அதிகரிப்பதற்கும் ஏழ்மை நிலையில் அல்லாத குடும்பங்களைக் காட்டிலும் அவர்களது வேளாண் சாராத வருமானம் 33% குறைவதற்கும் வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்