இந்தியாவின் முதல் நதி வாழ் ஓங்கில் கணக்கீட்டு அறிக்கையில் எட்டு மாநிலங்களில் உள்ள 28 ஆறுகளில் 6,327 ஓங்கில்கள் இருப்பதாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓங்கில்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
இந்தியாவில், கங்கை நதி ஓங்கில்கள் கங்கை-பிரம்மபுத்திரா-மேக்னா நதி வலை அமைப்பு மற்றும் அதன் துணை நதிகளில் வாழ்கின்றன.
குறைவான எண்ணிக்கையிலான சிந்து நதி ஓங்கில்கள் சிந்து நதி வலையமைப்பில் வாழ்கின்றன.