இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது, ஓசூர் விமான நிலையத் திட்டத்தின் இறுதி சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகமானது அப்பகுதியின் வான்வெளி மீதான ஒரு கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளதால், இதற்கு அதன் அனுமதியும் மற்றும் ஒப்புதலும் தற்போது தேவையாகும்.
கடந்த ஆண்டு, தமிழ்நாடு அரசானது இதுவரையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற் கொள்ளப் படாத நிலத்தில் அமைக்கப்படும் (பசுந்தடம்) ஒரு விமான நிலையத்தினை ஓசூரில் நிறுவுவதற்கு முன்மொழிந்தது.
இந்திய விமான நிலைய வாரியமானது, ஐந்து இடங்களை ஆய்வு செய்தது என்ற ஒரு நிலையில் மாநில அரசானது அந்தப் பட்டியலிலிருந்து தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) மற்றும் ஓசூர் தாலுக்காவிற்கு தெற்கில் உள்ள ஒரு தளம், ஓசூருக்கு கிழக்கிலும் சூளகிரிக்கு வடக்கிலும் உள்ள மற்றொரு தளம் என இரண்டு தளங்களை இறுதி செய்தது.
ஆனால், பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட்டிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஆனது, 2033 ஆம் ஆண்டு வரையில் சுமார் 150 கி.மீ பரப்பிலான வான்வழி தூரத்திற்குள் வேறு எந்த விமான நிலையத்தையும் உருவாக்குவதைத் தடை செய்கிறது.