உலக வானிலை அமைப்பானது, சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, ஓசோன் படலத்தின் புதுப்பிக்கப் பட்டத் தகவலுடன் கூடிய உலக வானிலைக் கண்காணிப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஓசோன் படலம் ஆனது, பூமியில் உள்ள உயிர்களைத் தீங்கு விளைவிக்கும் சூரிய புற ஊதா (UV) கதிர்வீச்சிலிருந்துப் பாதுகாக்கிறது.
ஓசோன் படலத்தின் சிதைவு குறித்து 1980 ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் கவனம் செலுத்தப் பட்டது.
இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, 1987 ஆம் ஆண்டின் மாண்ட்ரீயல் நெறி முறையானது ஓசோன் அளவைக் குறைக்கும் பல பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுகளுக்குத் தடை விதித்தது.
இன்றைய நிலவரப்படி, அவற்றின் உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆனது 99 சதவீதம் வரை படிப்படியாக நிறுத்தப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், வெப்பமண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலங்களில் சாதாரண அளவை விட அதிக ஓசோன் படலங்கள் காணப் பட்டதோடு, உயர் அட்ச ரேகைப் பகுதிகளில் சாதாரண அளவை விட குறைவான ஓசோன் படலங்கள் காணப் பட்டன.
பருவநிலை மாற்றம் ஆனது ஓசோன் படலத்தின் மீட்சியினை மெதுவாக்குகிறது.
2022 ஆம் ஆண்டில், அண்டார்டிக் பகுதியின் மேலமைந்த ஓசோன் துளையானது செப்டம்பர் மாதத்தில் ஒப்பீட்டளவில் தாமதமாக உருவாக தொடங்கிய நிலையில் அது மேலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒப்பீட்டளவில் பெரிய அளவு மற்றும் அடர்த்தியினைக் கொண்டிருந்தது.
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு எரிமலை வெடிப்பான ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹா’பாய் எரிமலை வெடிப்பானது வளிமண்டலப் படையடுக்கின் நீராவி உள்ளடக்கத்தை 5-10 சதவீதம் அதிகரித்துள்ளது.