சி 3 எஸ் (கோப்பர் நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவை) மற்றும் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்புச் சேவை (CAMS - Copernicus Atmosphere Monitoring Service) ஆகியவை ஓசோன் அடுக்கில் உள்ள துளையானது மீண்டும் சீரடைந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
இந்தத் துளை மீண்டும் தானே சீரடைவதற்குக் காரணம் துருவ சுழல் பகுதி ஆகும். (Polar Vertex)
அறிவியலாளர்களின் கூற்றுப் படி, இந்தத் துளை மூடப்பட்டதற்கான காரணம் கோவிட் – 19 ஊரடங்கின் காரணமான மாசுபாடு குறைந்ததன் காரணத்தினால் அல்ல என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தத் துளையானது ஆர்க்டிக்கின் மேல் பகுதியில் 1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் வரை பரவியுள்ள ஒரு துளையாகும்.
ஓசோன் அடுக்கு வரலாற்றில் கண்டறியப் பட்ட மிகப்பெரிய துருவம் இதுவாகும்.
இது வழக்கமற்ற காலநிலை மாற்றங்களின் காரணமாக உருவாகியுள்ளது.
Polar Vertex என்பது ஒரு குளிர்காலக் கூறாகும்.
Polar Vertex ஆனது மிகவும் உயரிய வளிமை மிக்கதாகவும் அதனுள் உள்ள வெப்ப நிலையானது மிகவும் குளிர்ந்ததாகவும் உள்ளது.
துருவ சுழல் என்பது அடுக்கு மண்டலத்தில் அல்லது ஸ்ட்ரடோ அடுக்கில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் சூறாவளி வடிவக் காற்றாகும்.
Polar Vertex ஆனது ட்ரோபோபாஸ் பகுதியிலிருந்து நீண்டு அடுக்கு மண்டலத்தில் ஊடுருவி மத்திய மண்டலத்தில் உள்ளது.
சுழல் ஆனது வலிமையாக இருந்தால், குளிர் காற்றானது வட அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்குள் எளிதில் நுழையாது.
ஓசோன் அடுக்கு என்பது புவியின் மேற்பரப்பிலிருந்து 10 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள அடுக்கு மண்டலம் என்று அழைக்கப்படும் வளிமண்டல மேல் அடுக்கில் காணப் படுகின்றது.