TNPSC Thervupettagam

ஓசோன் அடுக்குப் பாதுகாப்பிற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 16

September 17 , 2020 1444 days 497 0
  • இது ஓசோன் அடுக்கின் சிதைவு குறித்தும் அதைப் பாதுகாப்பதற்கான தகுந்த தீர்வுகளை ஆராய்வது குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது செப்டம்பர் 16 ஆம் தினத்தை ஓசோன் அடுக்குப் பாதுகாப்பிற்கான சர்வதேச தினமாகப் பறை சாட்டியது.
  • இது 1987 ஆம் ஆண்டில் ஓசோன் அடுக்கைச் சிதைவுறச் செய்யும் பொருட்கள் குறித்த மாண்டரீயல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட தினத்தைக் குறிக்கின்றது.
  • வாழ்க்கைக்கான ஓசோன்என்பது 2020 ஆம் ஆண்டிற்கான உலக ஓசோன் தினத்தின் முழக்கமாகும்.
  • ஓசோன் அடுக்கு என்பது அதிக அளவில் ஓசோன் செறிவுகளைக் கொண்டிருக்கும் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
  • ஓசோன் என்பது 3 ஆக்ஸிஜன் அணுக்களைக் (O3) கொண்ட ஒரு வாயுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்