TNPSC Thervupettagam

ஓசோன் அளவுகளில் அதிகரிப்பு

June 29 , 2020 1614 days 675 0
  • சமீபத்தில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது நாட்டின் பல நகரங்களில் ஓசோனின் (தீங்கு விளைவிக்கும் மாசுபொருள்) அளவு அதிகரிப்பதைக் கண்டறிந்து உள்ளது. 
  • ஓசோன் என்பது முதன்மையாக இந்தியாவில் ஒரு "கோடைக்கால வானிலைப் பிரச்சினை" ஆகும். ஏனெனில் சூரிய ஒளியின் இருப்பு நிலத்தடி மட்ட அளவில் இருக்கும் ஓசோன் உருவாக்கத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 
  • அதில் வெப்பம் ஒரு வினையூக்கியாகச் செயல்பட்டு ஒளி வேதியியல் எதிர் வினைகளை எளிதாக்குகிறது, எனவே கோடைக்கால மாதங்களில் ஓசோனின் அதிக செறிவு காணப்படுகிறது. 
  • அதிவேகக் காற்று, இடைப்பட்ட மழை, இடியுடன் கூடிய மழை, அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் ஆகியவை கோடைக்கால மாசுபாட்டின் பண்புகளாகும். 
  • வழக்கமாக, குளிர்கால நிலைமைகள் குறையும் போது ஓசோனின் அளவு அதிகரிக்கும். மேலும் அதன் இருப்பு பகலில் அதிகமாக உணரப்படுகிறது. 
  • ஓசோனானது எந்த ஒரு மூலத்தாலும் நேரடியாக வெளியேற்றப் படுவதில்லை. 
  • சூரிய ஒளி மற்றும் வெப்பம் ஆகியவற்றின் கீழ், நைட்ரஜனின் ஆக்சைடுகள், பிற எளிதில் ஆவியாகிற கரிமச் சேர்மங்கள் மற்றும் காற்றில் உள்ள வாயுக்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒளி வேதியியல் எதிர்வினைகளால் இது உருவாகிறது. 
  • பூமியின் ஓசோன் அடுக்கில் இருக்கும் ‘நல்ல’ ஓசோனானது மனிதர்களைத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்துப் பாதுகாக்கிறது, அதே சமயம் மிகவும் வினைபுரியும் ஆற்றலைக் கொண்ட தரைமட்ட அளவில் உள்ள ஓசோனானது மனித ஆரோக்கியத்தின் மீது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்