சமீபத்தில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது நாட்டின் பல நகரங்களில் ஓசோனின் (தீங்கு விளைவிக்கும் மாசுபொருள்) அளவு அதிகரிப்பதைக் கண்டறிந்து உள்ளது.
ஓசோன் என்பது முதன்மையாக இந்தியாவில் ஒரு "கோடைக்கால வானிலைப் பிரச்சினை" ஆகும். ஏனெனில் சூரிய ஒளியின் இருப்பு நிலத்தடி மட்ட அளவில் இருக்கும் ஓசோன் உருவாக்கத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதில் வெப்பம் ஒரு வினையூக்கியாகச் செயல்பட்டு ஒளி வேதியியல் எதிர் வினைகளை எளிதாக்குகிறது, எனவே கோடைக்கால மாதங்களில் ஓசோனின் அதிக செறிவு காணப்படுகிறது.
அதிவேகக் காற்று, இடைப்பட்ட மழை, இடியுடன் கூடிய மழை, அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் ஆகியவை கோடைக்கால மாசுபாட்டின் பண்புகளாகும்.
வழக்கமாக, குளிர்கால நிலைமைகள் குறையும் போது ஓசோனின் அளவு அதிகரிக்கும். மேலும் அதன் இருப்பு பகலில் அதிகமாக உணரப்படுகிறது.
ஓசோனானது எந்த ஒரு மூலத்தாலும் நேரடியாக வெளியேற்றப் படுவதில்லை.
சூரிய ஒளி மற்றும் வெப்பம் ஆகியவற்றின் கீழ், நைட்ரஜனின் ஆக்சைடுகள், பிற எளிதில் ஆவியாகிற கரிமச் சேர்மங்கள் மற்றும் காற்றில் உள்ள வாயுக்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒளி வேதியியல் எதிர்வினைகளால் இது உருவாகிறது.
பூமியின் ஓசோன் அடுக்கில் இருக்கும் ‘நல்ல’ ஓசோனானது மனிதர்களைத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்துப் பாதுகாக்கிறது, அதே சமயம் மிகவும் வினைபுரியும் ஆற்றலைக் கொண்ட தரைமட்ட அளவில் உள்ள ஓசோனானது மனித ஆரோக்கியத்தின் மீது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும்.