TNPSC Thervupettagam
July 18 , 2022 734 days 405 0
  • அறிவியலாளர்கள் கீழ் படை மண்டலத்தில் ஒரு புதிய பெரிய ஓசோன் துளையை கண்டுபிடித்துள்ளனர்.
  • இது அண்டார்டிகாவின் மேல் இருந்த துளையை விட ஏழு மடங்கு பெரியதாகும்.
  • இந்தப் புதிய ஓசோன் துளையானது வெப்ப மண்டலத்தின் மேல் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.
  • இது கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியாகும்.
  • இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
  • ஓசோன் அடுக்கு என்பது பூமியின் படைமண்டலத்தில் உள்ள ஒரு வாயு அடுக்கு ஆகும்.
  • இது புவியைச் சூழ்ந்து சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து அதனைப் பாதுகாக்கிறது.
  • இது பொதுவாகப் பூமியிலிருந்து 15-35 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள படை மண்டலத்தின் கீழ் பகுதியில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்