தரைமட்ட ஓசோன் ஆனது வெப்பமண்டலக் காடுகளின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிக்கிறது.
இதன் விளைவாக ஆண்டுதோறும் 290 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு ஈர்க்கப் படாமல் உள்ளது.
இந்த தாழ்மட்ட ஓசோன், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் தாவரங்களின் திறனில் இடையிட்டு, மனிதர்களுக்கும் உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது.
தரை மட்டங்களில் காணப்படும் ஓசோன், வெப்பமண்டலக் காடுகளின் புதியதொரு வருடாந்திர வளர்ச்சியைச் சராசரியாக 5.1% குறைக்கிறது என்று ஆராய்ச்சி ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
ஆசிய வெப்பமண்டலக் காடுகளின் புதிய வளர்ச்சியில் 10.9% இழப்பு ஏற்பட்டுள்ளதால், சில பகுதிகளில் இதன் விளைவு மேலும் அதிகமாகக் காணப்படுகிறது.