மீன்களின் காதில் அறிவியலாளர்கள் மர வளையங்களைப் போல ஆய்வு செய்யும் வகையிலான ஒரு வகையான கல் (செவிக்கல்) உள்ளது.
இந்தக் கற்களில் உள்ள வேதிப் பொருட்கள் மீன்கள் உயிருடன் இருக்கும் போது எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்தியது என்பதை மதிப்பிட ஆராய்ச்சியாளர்கள் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர்.
அவை நீலத்தூவி சூரை மீனை (புளூஃபின் டுனா) பருவநிலை நெருக்கடியிலிருந்துக் காக்க உதவும்.
உயரும் வெப்பநிலையானது இளம் நீலத்தூவி சூரை மீன்களின் வளர்சிதை மாற்ற விகிதங்களை வெகுவாகப் பாதிக்கிறது, குறிப்பாக அவற்றின் ஆற்றல் பயன்பாட்டைப் பாதிக்கிறது.
ஓட்டோலித் என்பது மீன்களின் காதில் உள்ள ஒரு கல் போன்ற கட்டியாகும்.
ஓட்டோலித் வளையங்கள், மர வளையங்களைப் போலவே, மீனின் வயதை அறியப் பயன்படுகின்றன.