TNPSC Thervupettagam

ஓத இழுவிசை மூலமான நட்சத்திர சீர்குலைவு நிகழ்வு

January 11 , 2023 687 days 400 0
  • நாசா நிறுவனத்தினால் இயக்கப்படும் தொலைநோக்கிகளானது, சமீபத்தில் ஒரு பெரிய கருந்துளை ஒரு நட்சத்திரத்தை உள்வாங்குவதைப் பதிவு செய்தன.
  • ஒரு கருந்துளை ஒரு நட்சத்திரத்தை உள்வாங்கும் இந்த சம்பவம் ஆனது அண்மையில் நிகழ்ந்த ஐந்தாவது நிகழ்வாகும்.
  • இது பூமியிலிருந்து 250 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, மற்றொரு அண்டத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்தது.
  • ஒரு கருந்துளையால் ஒரு நட்சத்திரம் அழிக்கப்படும் வானியல் நிகழ்வு ஆனது முறையாக ஓத இழுவிசை மூலமான நட்சத்திரச் சீர்குலைவு நிகழ்வு (TDE) என்று அழைக்கப் படுகிறது.
  • ஓத இழு விசை என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு வலிமையில் உள்ள வேறுபாடாகும்.
  • ஒரு அமைப்பின் மீது செலுத்தப்படும் ஓத இழுவிசையானது, அதை ஒன்றாக இணைத்திருக்கும் மூலக்கூறுகளுக்கிடையிலான விசையை விட அதிகமாக இருந்தால், அந்த அமைப்பு சீர்குலைந்து விடும்.
  • இந்நிகழ்வு அதிகாரப்பூர்வமாக AT2021ehb என அழைக்கப்படுகிறது.
  • இது நமது சூரியனை விட சுமார் 10 மில்லியன் மடங்கு நிறை கொண்ட மத்திய கருந்துளை கொண்ட ஒரு அண்டத்தில் நிகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்