இந்தியாவின் முதல் ஓத மண்டலங்களின் உயிரியல் கணக்கெடுப்பு (இன்டர்டைடல் பயோபிளிட்ஸ்) ஆனது, விசாகப்பட்டினம், மும்பை, கோவா மற்றும் அந்தமான் ஆகிய கடலோரப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட உயிரினங்கள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளது.
உயிரியல் கணக்கெடுப்பின் போது மும்பைப் புறநகரில் 80 இனங்களும், பெருநகரப் பகுதியில் 120 இனங்களும் பதிவு செய்யப்பட்டது.
அந்தமான் தீவுகளின் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த மூன்று ஓத மண்டலக் கணக்கெடுப்புகளில் 70க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கண்டறியப்பட்டன.
ஒரு ஓத மண்டலம் ஆனது பெருங்கடல் பரப்பானது நிலத்துடன் இணையும் ஒரு மாறு நிலைப் பகுதியைக் குறிக்கிறது.
இது உயர் ஓதத்தின் போது நீரில் மூழ்குகின்ற, மற்றும் ஓத அலைகள் பின்வாங்கும் போது வெளிப்பரப்பில் காற்றில் வெளிப்படுவதற்கும் இடையில் உள்ள மாறுநிலை கொண்ட ஒரு தனித்துவமான பகுதியாகும்.
கடலோர அரிப்புக்கு எதிராக ஒரு இயற்கையான இடையகமாகச் செயல்படுகின்றன என்ற ஒரு நிலையில் அவை அலை ஆற்றலை நன்கு உட்கிரகித்து கரையோரங்களை நிலைப்படுத்த உதவுகின்றன.