கேரளாவின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் K.K. சைலஜா அவர்களுக்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க ஓபன் சொசைட்டி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
பொது சுகாதாரப் பணிகளில் இவர் ஆற்றிய சேவைக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.
ஓபன் சொசைட்டி விருதானது மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தினால் வழங்கப் படும் உயரிய ஒரு விருதாகும்.
இந்த விருதானது சமுதாயத்திற்கு சேவை செய்யும் தனித்துவம் வாய்ந்த நபர்களுக்கு வழங்கப் படும் ஒரு வருடாந்திர விருதாகும்.
2020 ஆம் ஆண்டில் ஓபன் சொசைட்டி விருதானது நோபல் பரிசு பெற்ற ஸ்வேத்லனா அலெக்செய்விச் (Svetlana Alexeyevich) என்பவருக்கு வழங்கப்பட்டது.