சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர்ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முதல்முறையாக அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு, அன்றைய மதராஸ் மாநிலத்தின் முதல்வராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பதவி வகித்தார்.
இவருடைய பங்களிப்புகள்
மதராஸ் மாநிலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
சுதந்திரமடைந்த பிறகு, நாட்டிலேயே முதல்முறையாக அரசு பொதுப் பணிகளில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் இவரேயாவார். பின்தங்கிய மக்களுக்கு 29 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மேலும், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு29% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.