இந்தியா முழுவதும் ஓய்வூதிய வாரமானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை இந்திய அரசு மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றினால் இணைந்து அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இத்தினமானது பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மன் - தன் (Pradhan Mantri Shram Yogi Maan-dhan - PM-SYM) மற்றும் வர்த்தகர்கள் & சுயதொழில் செய்பவர்கள் ஆகியோருக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அதிகப்படுத்துவதையும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஓய்வூதிய திட்டங்களின் நன்மைகள் குறித்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 10 கோடி பயனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் உள்ள 11 கோடி தொழிலாளர்கள், 2.5 கோடி சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 40 லட்சம் அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் 10 லட்சம் ஆஷா தொழிலாளர்கள் ஆகியோர் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய இருக்கின்றது.