ஓரியன் நெபுலாவில் வியாழன் கோள் அளவிலான விண்பொருட்கள்
November 23 , 2023 369 days 264 0
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திர உருவாக்கப் பகுதியான ஓரியன் நெபுலாவில் (விண் முகில் படலம்) வியாழன் கோளின் அளவிலான, எந்தவித இணைப்புமின்றி மிதக்கும் விண்பொருட்களை ஐரோப்பிய விண்வெளி முகமையின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவை “வியாழன் கோளின் நிறையிலான இரும வடிவப் பொருள்கள்” அல்லது “ஜம்போஸ்” (பருத்தப் பொருட்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
அவை அதன் தோற்றுவாய் நட்சத்திரத்தைச் சுற்றிய பாதையில் காணப்படவில்லை என்பதால் நட்சத்திரங்கள் அல்லது கிரகங்களுக்கான பெரும்பாலான வழக்கமான வரையறைகளுக்குள் அவை பொருந்தாது.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது, தற்போதுள்ள நட்சத்திரம் மற்றும் கிரக உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கிறது.
நீராவி மற்றும் மீத்தேன் கொண்ட வளிமண்டலங்களுடன், இந்த ஜம்போக்கள் அவற்றின் கட்டமைப்பில் ஒரு கோள் போன்றப் பண்புகளைக் கொண்டுள்ளன.
அவற்றின் கட்டமைப்பு கோள்களை போல இருந்தாலும், அவை எந்தவித பிணைப்பும் இன்றி மிதக்கும் தன்மையால் ஒரு கோளாக தகுதி பெறவில்லை.
ஓரியன் நெபுலா பூமியிலிருந்து சுமார் 1,344 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.