பிரான்சின் மோன்ட்-டி-மார்சானில் நடைபெற்ற ஒரு பலதரப்புப் பயிற்சியான ஓரியன் பயிற்சியில் முதன்முறையாக, நான்கு இந்திய ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றன.
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் நாடுகள் உட்பட சுமார் 12,000 படை வீரர்களை உள்ளடக்கிய மிகப்பெரியப் பயிற்சிகளில் ஒன்றான ஓரியன் பயிற்சியானது பிரான்சு நாட்டினால் நடத்தப் படுகின்றது.
இந்தியா மற்றும் பிரான்சு ஆகியவற்றோடு, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய பல நாடுகளின் விமானப் படைகளும் இந்தப் பலதரப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக இடம் பெற்றன.